ரசிகர்களைச் சிரிக்க வைக்க வரும் காம்ரேட் கல்யாண்: டிரெய்லர் வெளியாகி அக்டோபர் 9 ரிலீஸ்
முழுக்க முழுக்க நகைச்சுவை நிறைந்த அண்டர்கவர் கதையம்சத்துடன் உருவாகியுள்ள 'காம்ரேட் கல்யாண்' திரைப்படத்தின் முன்னோட்டம் வெளியாகி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது. இப்படம் வரும் அக்டோபர் 9 ஆம் தேதி உலகம் முழுவதும் உள்ள திரையரங்குகளில் வெளியாகவுள்ளதாக பிஆர்ஓ வம்சி சேகர் பகிர்ந்துள்ளார். நகைச்சுவையும் திருப்பங்களும் கலந்த இந்த டிரெய்லர் சமூக வலைதளங்களில் நல்ல வரவேற்பைப் பெற்று வருகிறது. கல்யாண் என்ற அண்டர்கவர் தோழனின் அதிரடி மற்றும் கலகலப்பான சாகசங்கள் ரசிகர்களைக் கவரும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளன. படத்தின் பின்னணி இசையும் நகைச்சுவைக் காட்சிகளை மேலும் மெருகேற்றியுள்ளது. நடிகர்களின் கலகலப்பான வசனங்களும் டைமிங் காமெடியும் ரசிக்க வைக்கின்றன. குடும்பத்துடன் ரசிக்கும்படியான பொழுதுபோக்கு அம்சங்கள் நிறைந்த இப்படத்தின் மீது டோலிவுட் வட்டாரங்களில் நல்ல எதிர்பார்ப்பு நிலவுகிறது. அக்டோபர் 9 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகும் இப்படம் ரசிகர்களுக்கு கலகலப்பான சிரிப்பு விருந்தாக அமையும் என்று சினிமா ஆர்வலர்கள் எதிர்பார்க்கின்றனர்.
· Ursvamsishekar