திரையரங்குகளில் கலகலப்பான என்டர்டெயினர்: காம்ரேட் கல்யாண் ரிலீஸுக்கு இன்னும் 7 நாட்களே பாக்கி

திரையரங்குகளில் கலகலப்பான என்டர்டெயினர்: காம்ரேட் கல்யாண் ரிலீஸுக்கு இன்னும் 7 நாட்களே பாக்கி

கலகலப்பான நகைச்சுவை மற்றும் குடும்பப் பின்னணியில் உருவாகியுள்ள 'காம்ரேட் கல்யாண்' திரைப்படம் உலகம் முழுவதும் உள்ள திரையரங்குகளில் வரும் அக்டோபர் 9 ஆம் தேதி பிரம்மாண்டமாக வெளியாகிறது. படம் வெளியாக இன்னும் வெறும் 7 நாட்களே உள்ள நிலையில், படத்தின் கவுண்டவுன் போஸ்டரை படக்குழு வெளியிட்டுள்ளது. பொழுதுபோக்கு அம்சங்கள் நிறைந்த இந்த படத்தில் இளைஞர்களைக் கவரும் நகைச்சுவை சரவெடிகளும், குடும்பங்கள் கொண்டாடும் உணர்வுப்பூர்வமான காட்சிகளும் நிறைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. சமூக வலைத்தளங்களில் படத்தின் போஸ்டர்களும் பாடல் காட்சிகளும் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்று வருகின்றன. திரையரங்குகளில் ரசிகர்களை உற்சாகத்தில் ஆழ்த்தும் அனைத்து அம்சங்களும் இதில் தயாராக உள்ளன. விடுமுறை காலத்தை ஒட்டி படம் திரைக்கு வருவதால், குடும்ப ரசிகர்களின் பேராதரவைப் பெற்று பாக்ஸ் ஆபிசில் நல்ல வரவேற்பை பெறும் என்று விநியோகஸ்தர்கள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர். விரைவில் படத்தின் டிரெய்லர் மற்றும் திரையரங்கு முன்பதிவு பற்றிய விபரங்கள் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட உள்ளன.

· Ursvamsishekar

பழைய செய்திகள்