வெளிநாடுகளில் 2 நாட்களில் ரூ.115 கோடி வசூல்: வசூல் வேட்டையில் ரஜினியின் கூலி

வெளிநாடுகளில் 2 நாட்களில் ரூ.115 கோடி வசூல்: வசூல் வேட்டையில் ரஜினியின் கூலி

சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான 'கூலி' திரைப்படம் சர்வதேச திரையரங்குகளில் அதிரடி வசூல் சாதனையை நிகழ்த்தி வருகிறது. வெளிநாட்டு வெளியீட்டு உரிமையைப் பெற்றுள்ள ஹம்சினி என்டர்டெயின்மென்ட் நிறுவனம், படம் வெளியான முதல் இரண்டு நாட்களில் மட்டும் வெளிநாட்டு பாக்ஸ் ஆபிஸில் 115 கோடி ரூபாய்க்கும் மேல் வசூலித்துள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகள், ஆசியா மற்றும் மத்திய கிழக்கு நாடுகள் என அனைத்து முக்கிய சர்வதேச சந்தைகளிலும் ரஜினி மேனியா உச்சத்தை தொட்டுள்ளது. லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவான இந்த மல்டிஸ்டாரர் படத்தில் நாகர்ஜுனா, உபேந்திரா, சத்யராஜ் மற்றும் அமீர்கானின் தோற்றம் பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்துள்ளது. வார இறுதி நாட்களில் வெளிநாட்டு திரையரங்குகளில் கூடுதல் காட்சிகள் திரையிடப்பட்டு வருவதால், முதல் வாரத்தில் வெளிநாட்டு வசூல் மட்டுமே பல முந்தைய சாதனைகளை முறியடிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. அனிருத்தின் பின்னணி இசை மற்றும் ஆக்ஷன் காட்சிகள் ரசிகர்களை மீண்டும் மீண்டும் தியேட்டருக்கு வரவழைக்கின்றன.

· Hamsinient

பழைய செய்திகள்