இன்னும் 30 நாட்களில் சூப்பர்ஸ்டார் ரஜினியின் கூலி: கவுண்ட்டவுனை தொடங்கிய ஹம்சினி

இன்னும் 30 நாட்களில் சூப்பர்ஸ்டார் ரஜினியின் கூலி: கவுண்ட்டவுனை தொடங்கிய ஹம்சினி

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் நடிக்கும் 'கூலி' திரைப்படம் உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாக இன்னும் 30 நாட்களே உள்ள நிலையில், வெளிநாட்டு விநியோகஸ்தரான ஹம்சினி என்டர்டெயின்மென்ட் தனது அதிகாரப்பூர்வ கவுண்ட்டவுனைத் தொடங்கியுள்ளது. ஆகஸ்ட் 14 அன்று சுதந்திர தின வாரத்தை முன்னிட்டு இப்படம் சர்வதேச அளவில் பிரம்மாண்டமாக வெளியாகிறது. சன் பிக்சர்ஸ் தயாரிக்கும் இப்படத்தில் ரஜினிகாந்துடன் இணைந்து தெலுங்கு நடிகர் நாகர்ஜுனா, கன்னட நடிகர் உபேந்திரா, பாலிவுட் சூப்பர்ஸ்டார் அமீர்கான், சத்யராஜ், சௌபின் ஷாஹிர் மற்றும் ஸ்ருதிஹாசன் என முன்னணி நட்சத்திரங்கள் பல மொழிகளில் இருந்து இணைந்து நடித்துள்ளனர். அனிருத் இசையமைக்கும் இப்படத்தின் அனைத்து வெளிநாட்டு உரிமங்களையும் ஹம்சினி என்டர்டெயின்மென்ட் பெற்றுள்ளது. இந்தியாவுக்கு இணையாக அமெரிக்கா, ஐரோப்பா மற்றும் ஆசிய நாடுகளிலும் ரசிகர் மன்ற காட்சிகள் மற்றும் அதிகாலை காட்சிகளுக்கு விரிவான ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன.

· Hamsinient

பழைய செய்திகள்