காஸ்மிக் சாம்சன் உலகளாவிய வெளியீட்டிற்கு இன்னும் 10 நாட்களே உள்ளன: கவுண்டவுனைத் தொடங்கிய படக்குழு!

காஸ்மிக் சாம்சன் உலகளாவிய வெளியீட்டிற்கு இன்னும் 10 நாட்களே உள்ளன: கவுண்டவுனைத் தொடங்கிய படக்குழு!

வித்தியாசமான கதைக்களத்தில் பிரம்மாண்ட அட்வென்ச்சர் திரைப்படமாக உருவாகியுள்ள காஸ்மிக் சாம்சன் உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாக இன்னும் சரியாக 10 நாட்களே உள்ளன. இதையொட்டி, அதிகாரப்பூர்வ கவுண்டவுன் போஸ்டரை வெளியிட்டு ரசிகர்களின் உற்சாகத்தை அதிகரித்துள்ளது விநியோக நிறுவனமான ஏபி இன்டர்நேஷனல். ஒரு சாதாரண மனிதன் எதிர்கொள்ளும் அசாதாரணமான சாகசப் பயணத்தையும், அதில் ஏற்படும் கலகலப்பான திருப்பங்களையும் மையமாகக் கொண்டு இப்படம் உருவாக்கப்பட்டுள்ளது. மலையாளத்தின் முன்னணி தயாரிப்பு நிறுவனமான வீக்கெண்ட் பிளாக்பஸ்டர்ஸ் நிறுவனம் இப்படத்தை தயாரித்துள்ளதால், கதை மற்றும் தொழில்நுட்ப ரீதியாக படம் மிக உயர்ந்த தரத்தில் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. வருகின்ற நவம்பர் 27, 2026 அன்று உலகம் முழுவதும் உள்ள திரையரங்குகளில் காஸ்மிக் சாம்சன் திரைப்படம் வெளியாகவுள்ளது. கற்பனை உலகமும் விறுவிறுப்பான சாகசங்களும் நிறைந்த இந்த திரை விருந்தைக் காண திரையுலக ரசிகர்கள் மிகுந்த ஆர்வத்துடன் காத்திருக்கின்றனர்.

· Apifilms

பழைய செய்திகள்