பிரபுதேவா படத்தில் ஆடை வடிவமைப்பு: வடிவமைப்பாளர் சுவரூபா பகிர்ந்த அனுபவம்!

பிரபுதேவா படத்தில் ஆடை வடிவமைப்பு: வடிவமைப்பாளர் சுவரூபா பகிர்ந்த அனுபவம்!

இயக்குநர் சாம் ரோட்ரிக்ஸ் இயக்கத்தில் பிரபுதேவா, வடிவேலு உள்ளிட்டோர் நடிக்கும் புதிய திரைப்படத்தில் ஆடை வடிவமைப்பாளராக பணியாற்றியுள்ள சுவரூபா தனது அனுபவங்களை பகிர்ந்துள்ளார். இந்த படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் ஆடை வடிவமைப்பாளராக அவர் அறிமுகமாகிறார். இயக்குநரின் கற்பனைக்கு வடிவம் கொடுக்கும் வகையில் மிகுந்த ஆய்வுகளுக்குப் பிறகே ஒவ்வொரு கதாபாத்திரத்திற்கான ஆடைகளும் நேர்த்தியாக வடிவமைக்கப்பட்டதாக சுவரூபா தெரிவித்தார். பிரபுதேவா, வடிவேலு மற்றும் நான்கு கதாநாயகிகள் நடிக்கும் பிரம்மாண்ட கதைக்களம் என்பதால் வண்ணமயமான ஆடைகள் உருவாக்கப்பட்டுள்ளன. தனது முதல் படத்திலேயே முன்னணி நட்சத்திரங்கள் நடிக்கும் பெரிய திரைப்படத்தில் பணியாற்றும் வாய்ப்பளித்த தயாரிப்பாளர் கண்ணன் ரவி மற்றும் இயக்குநர் சாம் ரோட்ரிக்ஸுக்கு அவர் நன்றி தெரிவித்துள்ளார். இப்படத்தின் வண்ணமயமான தோற்றங்கள் திரையில் ரசிகர்களை வெகுவாக ஈர்க்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

· Actor Kayal Devaraj

பழைய செய்திகள்