சைந்தவி வெளியிடும் 'ஏதோ தோன்றுது' பாடல்: காட்டேஜ் படத்தின் இரண்டாவது சிங்கிள் அறிவிப்பு
இயக்குனர் சதீஷ்குமார் இயக்கத்தில் உருவாகி வரும் 'காட்டேஜ்' திரைப்படத்தின் இரண்டாவது சிங்கிள் பாடலான 'ஏதோ தோன்றுது' அக்டோபர் 30 அன்று வெளியாகவுள்ளது. பிரபல பின்னணிப் பாடகி சைந்தவி இந்த மெலடி பாடலை சரிகம தமிழ் தளத்தில் அதிகாரப்பூர்வமாக வெளியிடுகிறார். இசையமைப்பாளர் செந்தமிழன் இசையில், பாடகி கிருத்திகா கொண்டா பாடியுள்ள இந்த பாடல் இளமை ததும்பும் காதல் மெலடியாக உருவாகியுள்ளது. எவல்யூஷன் என்டர்டெயின்மென்ட் தயாரிப்பில் உருவாகும் இப்படத்தின் பாடல்களுக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது. திகில் கலந்த காதல் திரைப்படமாக உருவாகி வரும் 'காட்டேஜ்' படத்தின் அடுத்தடுத்த அப்டேட்டுகள் மற்றும் டீசர் வெளியீடு விரைவில் அறிவிக்கப்படும் என படக்குழு தெரிவித்துள்ளது.
· Actor Kayal Devaraj