காட்டேஜ் படத்தின் ஏதோ தோன்றுது பாடல்: பாடகி சைந்தவி வெளியிட்ட முக்கிய அறிவிப்பு

காட்டேஜ் படத்தின் ஏதோ தோன்றுது பாடல்: பாடகி சைந்தவி வெளியிட்ட முக்கிய அறிவிப்பு

இயக்குநர் சதீஷ்குமார் இயக்கத்தில் உருவாகி வரும் 'காட்டேஜ்' திரைப்படத்தின் இரண்டாவது ஒற்றைப் பாடலான 'ஏதோ தோன்றுது' பாடலை பிரபல பின்னணிப் பாடகி சைந்தவி அதிகாரப்பூர்வமாக அறிமுகப்படுத்தியுள்ளார். இந்த மெலடி பாடல் அக்டோபர் 30 ஆம் தேதி சரிகம தமிழ் யூடியூப் தளத்தில் வெளியாகவுள்ளது. இளம் இசையமைப்பாளர் செந்தமிழின் இசையில், கிருத்திகா கொண்டாவின் இனிமையான குரலில் இப்பாடல் உருவாகியுள்ளது. எவல்யூஷன் என்டர்டெயின்மென்ட் நிறுவனம் தயாரிக்கும் இந்த படம் த்ரில்லர் மற்றும் மிஸ்ட்ரி பின்னணியில் உருவாகி வருகிறது. படத்திற்கு நந்தி ஒளிப்பதிவு மற்றும் தொழில்நுட்பப் பணிகளை கவனித்து வருகிறார். காதல் உணர்வுகளையும் எதிர்பாராத மர்மங்களையும் இணைக்கும் ஒரு முக்கியமான தருணத்தில் இந்த பாடல் இடம்பெறுவதாக படக்குழு தெரிவித்துள்ளது. இசை ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெறும் என எதிர்பார்க்கப்படும் இந்த இரண்டாவது சிங்கிள் பாடல், படத்தின் மீதான கவனத்தை மேலும் கூட்டியுள்ளது.

· Idiamondbabu

பழைய செய்திகள்