இணையத்தில் 5 நாட்களாக ஓயாத டிரெண்டிங்: ரீல்ஸ்களை ஆக்கிரமிக்கும் பாலைய்யாவின் 'டாடா தமாகா' பாடல்!
நந்தமுரி பாலகிருஷ்ணா மற்றும் இசையமைப்பாளர் தமன் கூட்டணியில் உருவாகியுள்ள 'டாடா தமாகா' பாடல் வெளியான ஐந்து நாட்களாக யூடியூப் மற்றும் இன்ஸ்டாகிராம் ரீல்ஸ்களில் தொடர்ந்து முதலிடத்தில் டிரெண்டாகி வருகிறது. ரசிகர்கள் மற்றும் இணையவாசிகள் இப்பாடலுக்கு விதவிதமான ரீல்ஸ்களை உருவாக்கி சமூக வலைதளங்களை அதிரவைத்து வருகின்றனர். பாலகிருஷ்ணாவின் தனித்துவமான குரலில் ஒலிக்கும் இந்த துள்ளலான நடனப் பாடல், இளைஞர்கள் மத்தியில் ஒரு புதிய எனர்ஜியை ஏற்படுத்தியுள்ளது. சேகர் மாஸ்டரின் எளிமையான மற்றும் கவர்ச்சிகரமான நடன ஸ்டெப்புகளைப் பின்பற்றி ஏராளமானோர் வீடியோக்களைப் பதிவிட்டு வருவதால், இப்பாடலின் ரீச் நாளுக்கு நாள் எல்லைகளைத் தாண்டிப் பரவி வருகிறது. வரும் டிசம்பர் 24 அன்று வெளியாகும் 'டாடா' படத்திற்கு இந்தப் பாடல் ஒரு மிகப்பெரிய உந்துசக்தியாக அமைந்துள்ளது. பட வெளியீட்டுக்கு இன்னும் சில வாரங்களே உள்ள நிலையில், இந்த ஆரம்பக்கட்ட அலையே திரையரங்குகளில் பாலகிருஷ்ணா ரசிகர்களின் கொண்டாட்டத்தை உறுதி செய்துள்ளது.
· Ursvamsishekar