தர்ஷனின் பிறந்தநாளில் வெளியான 'காட்டேரா' பிரம்மாண்ட க்ளிம்ப்ஸ்: மாஸ் ஆக்ஷன் விருந்து

தர்ஷனின் பிறந்தநாளில் வெளியான 'காட்டேரா' பிரம்மாண்ட க்ளிம்ப்ஸ்: மாஸ் ஆக்ஷன் விருந்து

கன்னட திரையுலகின் முன்னணி நட்சத்திரமான சேலஞ்சிங் ஸ்டார் தர்ஷனின் பிறந்தநாளை முன்னிட்டு, தருண் சுதிர் இயக்கத்தில் அவர் நடிக்கும் புதிய திரைப்படத்திற்கு 'காட்டேரா' என தலைப்பிடப்பட்டு மிரட்டலான க்ளிம்ப்ஸ் வீடியோ வெளியிடப்பட்டுள்ளது. ராக்லைன் வெங்கடேஷ் தயாரிக்கும் இந்த படத்தின் பிரத்யேக வீடியோ சமூக வலைதளங்களில் தீயாய் பரவி வருகிறது. கிராமத்துப் பின்னணியில் விவசாயிகளின் உரிமைக்காக போராடும் ஆக்ஷன் நாயகனாக தர்ஷன் இந்த டீசரில் மிரட்டலான தோற்றத்தில் காட்சியளிக்கிறார். ஹரிகிருஷ்ணாவின் அதிரடி பின்னணி இசை வீடியோவின் தாக்கத்தை மேலும் கூட்டியுள்ளது. இதில் மாளவிகா அவினாஷ் மற்றும் முன்னணி நடிகர்கள் பலரும் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர். ரசிகர்களுக்கு சிறந்த பிறந்தநாள் பரிசாக அமைந்துள்ள இந்த க்ளிம்ப்ஸ் வீடியோ யூடியூபில் வெளியான சில மணி நேரங்களிலேயே லட்சக்கணக்கான பார்வைகளைக் கடந்து ட்ரெண்டிங்கில் முதலிடம் பிடித்துள்ளது.

· Ursvamsishekar

பழைய செய்திகள்