25 கோடி ஸ்ட்ரீம்களைக் கடந்து சாதனை படைத்த 'டிசி' இசை ஆல்பம்: சன் பிக்சர்ஸ் அறிவிப்பு

25 கோடி ஸ்ட்ரீம்களைக் கடந்து சாதனை படைத்த 'டிசி' இசை ஆல்பம்: சன் பிக்சர்ஸ் அறிவிப்பு

சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் லோகேஷ் கனகராஜ் மேற்பார்வையில் உருவான 'டிசி' திரைப்படத்தின் இசை ஆல்பம் உலகளவில் அனைத்து முன்னணி ஆடியோ தளங்களிலும் சேர்த்து 25 கோடிக்கும் (250M+) அதிகமான ஸ்ட்ரீம்களைக் கடந்து சாதனை படைத்துள்ளது. ராக்ஸ்டார் அனிருத் ரவிச்சந்தர் இசையமைத்த இப்படத்தின் அனைத்துப் பாடல்களும் இணையத்தில் தொடர்ந்து ட்ரெண்டாகி வருகின்றன. ஆக்ஷன் மற்றும் உணர்ச்சிகள் நிறைந்த இத்திரைப்படத்தின் பின்னணி இசை மற்றும் பாடல்கள் வெளியானது முதல் இசைப் பிரியர்களின் பிளேலிஸ்ட்டில் முதலிடத்தைப் பிடித்துள்ளன. குறிப்பாக இளைஞர்களைக் கவரும் வகையில் அமைந்த இதன் நவீன ட்யூன்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகப் பகிரப்பட்டு வருகின்றன. இந்த சாதனையை சன் பிக்சர்ஸ் நிறுவனம் அதிகாரப்பூர்வ போஸ்டர் மூலம் அறிவித்துள்ளது. தொடர்ந்து இசை உலகில் தனது ஆதிக்கத்தை நிலைநிறுத்தி வரும் அனிருத்தின் இசையில் இந்த சாதனை உருவானது படக்குழுவினருக்கும் ரசிகர்களுக்கும் பெரும் மகிழ்ச்சியை அளித்துள்ளது.

· Sun Pictures

பழைய செய்திகள்