டெத் ரயில்வே டைட்டில் டீசருக்கு பாராட்டு மழை: வெற்றிமாறன், சூரி உள்ளிட்ட பிரபலங்கள் வாழ்த்து!
பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் வெளியான டெத் ரயில்வே திரைப்படத்தின் டைட்டில் டீசருக்கு திரையுலக பிரபலங்கள் பலரும் பாராட்டுக்களையும் வாழ்த்துகளையும் குவித்து வருவதாக நடிகர் கயல் தேவராஜ் தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார். இந்த மிரட்டலான டீசர் ரசிகர்களை வியப்பில் ஆழ்த்தியுள்ள நிலையில் கோலிவுட் வட்டாரத்திலும் பெரும் பேசுபொருளாகியுள்ளது. வெற்றிமாறன், சூரி, சுதா கொங்கரா, சாந்தனு, அசோக் செல்வன், சசிகுமார் மற்றும் காளிதாஸ் உள்ளிட்ட முன்னணி நட்சத்திரங்கள் மற்றும் இயக்குனர்கள் இந்த புதிய முயற்சிக்குத் தங்களின் நெஞ்சார்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளனர். ஜேகே பிலிம் இன்டர்நேஷனல் தயாரிப்பில் உருவாகும் இப்படத்தில் பவானி ஸ்ரீ, சிவதா மற்றும் பலர் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர். வரலாற்று பின்னணியில் உருவான ரயிலின் மர்மமான சூழலை டீசரின் காட்சிகள் கண்முன் நிறுத்தியுள்ளன. முன்னணி திரை பிரபலங்களின் ஏகோபித்த வாழ்த்து மழையால் படக்குழு மிகுந்த உற்சாகத்தில் உள்ளது. அடுத்ததாக படத்தின் முதல் பார்வை போஸ்டர் மற்றும் படப்பிடிப்பு சார்ந்த முக்கிய விவரங்களை வெளியிட படக்குழுவினர் திட்டமிட்டுள்ளனர்.
· Actor Kayal Devaraj