சிலம்பரசன் டிஆர் வெளியிடும் 'டெலிவரி பாய்' படத்தின் விறுவிறுப்பான டிரெய்லர்!
நடிகர் லியோ சிவகுமார் நடிப்பில் உருவாகியுள்ள 'டெலிவரி பாய்' திரைப்படத்தின் டிரெய்லர் நாளை காலை 10:10 மணிக்கு வெளியாகும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த டிரெய்லரை முன்னணி நட்சத்திர நாயகன் சிலம்பரசன் டிஆர் (STR) தனது சமூக வலைதளப் பக்கத்தில் வெளியிடவுள்ளார் என்ற தகவல் ரசிகர்களிடையே எதிர்பார்ப்பை எகிற வைத்துள்ளது. இயக்குநர் போஸ் இயக்கத்தில் உருவாகியுள்ள இப்படத்தில் லியோ சிவகுமாருடன் இணைந்து ராதிகா சரத்குமார், பிரிகிடா சகா, துஷ்யந்த் ஜெயபிரகாஷ் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். சுந்தரமூர்த்தி கே.எஸ் இசையமைத்துள்ளார். டெலிவரி செய்யும் இளைஞர்களின் அன்றாட வாழ்க்கை, அவர்கள் சந்திக்கும் சவால்கள் மற்றும் எதிர்பாராத திருப்பங்களை மையமாகக் கொண்ட கமர்ஷியல் திரைப்படமாக இது தயாராகியுள்ளது. சிலம்பரசன் டிஆர் இந்த டிரெய்லரை வெளியிடுவது படத்திற்கு கூடுதல் பலத்தைக் கூட்டியுள்ளது. 'டெலிவரி பாய்' திரைப்படம் வரும் அக்டோபர் 23-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ள நிலையில், நாளைய டிரெய்லர் வெளியீட்டைக் காண ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கின்றனர்.
· Actor Kayal Devaraj