தேவரா படத்தின் ஃபியர் பாடல் மே 19 அன்று வெளியீடு: ஜூனியர் என்டிஆர் அதிரடி அறிவிப்பு!

தேவரா படத்தின் ஃபியர் பாடல் மே 19 அன்று வெளியீடு: ஜூனியர் என்டிஆர் அதிரடி அறிவிப்பு!

ஜூனியர் என்டிஆர் நடிப்பில் உருவாகி வரும் தேவரா திரைப்படத்தின் முதல் சிங்கிளான ஃபியர் பாடல் மே 19 அன்று வெளியாகும் என்று நடிகர் ஜூனியர் என்டிஆர் தனது எக்ஸ் தளத்தில் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார். மே 20 அன்று அவரது பிறந்தநாள் வரவிருக்கும் நிலையில், ரசிகர்களுக்கு முன்னதாகவே பிறந்தநாள் விருந்தாக இந்தப் பாடல் அமைய உள்ளது. இயக்குநர் கொரட்டலா சிவா இயக்கத்தில் உருவாகும் இப்படத்திற்கு ராக்ஸ்டார் அனிருத் இசையமைத்துள்ளார். அனிருத்தின் அதிரடி இசை எப்போதுமே மாஸ் காட்சிகளுக்கு கூடுதல் பலம் சேர்க்கும் என்பதால், ஃபியர் பாடல் எந்த அளவுக்கு ரசிகர்களை துள்ளல் போட வைக்கும் என்ற எதிர்பார்ப்பு சோசியல் மீடியாவில் எகிறியுள்ளது. சையிப் அலி கான், ஜான்வி கபூர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கும் இப்படம் பான் இந்திய அளவில் பல மொழிகளில் திரைக்கு வரத் தயாராகி வருகிறது. மே 19 அன்று வெளியாகும் ஃபியர் பாடலை வரவேற்க ஜூனியர் என்டிஆர் ரசிகர்கள் இணையத்தில் இப்போதே கொண்டாட்டங்களை ஆரம்பித்துவிட்டனர்.

· Hamsinient

பழைய செய்திகள்