ஜூனியர் என்டிஆரின் தேவரா: சர்வதேச வெளியீட்டு உரிமத்தை தட்டித்தூக்கிய ஹம்சினி என்டர்டெயின்மென்ட்
கொரட்டலா சிவா இயக்கத்தில் ஜூனியர் என்டிஆர் கதாநாயகனாக நடித்துள்ள 'தேவரா' திரைப்படத்தின் ஒட்டுமொத்த வெளிநாட்டு திரையரங்கு உரிமத்தை ஹம்சினி என்டர்டெயின்மென்ட் நிறுவனம் அதிகாரப்பூர்வமாக கைப்பற்றியுள்ளது. ஆர்ஆர்ஆர் படத்தின் உலகளாவிய வெற்றிக்குப் பிறகு ஜூனியர் என்டிஆர் நடிப்பில் உருவாகியுள்ளதால் இப்படத்திற்கு சர்வதேச அளவில் அதீத எதிர்பார்ப்பு நிலவுகிறது. இப்படத்தில் பாலிவுட் நட்சத்திரங்கள் ஜான்வி கபூர் கதாநாயகியாகவும், சைப் அலி கான் வில்லனாகவும் நடித்துள்ளனர். அனிருத் இசையமைத்துள்ள இப்படத்தை யுவசுதா ஆர்ட்ஸ் மற்றும் என்டிஆர் ஆர்ட்ஸ் நிறுவனங்கள் இணைந்து தயாரித்துள்ளன. வரும் செப்டம்பர் 27 அன்று படம் உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகிறது. அமெரிக்கா, ஐக்கிய அரபு அமீரகம், ஐரோப்பா உள்ளிட்ட சர்வதேச சந்தைகளில் இதுவரை இல்லாத அளவுக்கு பிரம்மாண்டமான முறையில் தேவரா படத்தை வெளியிட திட்டமிட்டுள்ளதாக விநியோகஸ்தர்கள் தெரிவித்துள்ளனர்.
· Hamsinient