இரத்தத்தால் எழுதப்பட்ட கதை: தேவரா திரைக்கு வர இன்னும் 10 நாட்களே உள்ளன!

இரத்தத்தால் எழுதப்பட்ட கதை: தேவரா திரைக்கு வர இன்னும் 10 நாட்களே உள்ளன!

ஜூனியர் என்டிஆர் நடிப்பில் உருவாகியுள்ள தேவரா திரைப்படம் திரையரங்குகளில் வெளியாக இன்னும் 10 நாட்களே உள்ளன. இது இரத்தத்தால் எழுதப்பட்ட வீரக் கதை என்று வர்ணித்து, வெளிநாட்டு விநியோகஸ்தரான ஹம்சினி என்டர்டெயின்மென்ட் தனது எக்ஸ் பக்கத்தில் கவுண்டவுன் போஸ்டருடன் அறிவிப்பை வெளியிட்டுள்ளது. கொரட்டலா சிவா இயக்கத்தில் உருவாகியுள்ள இப்படத்தில் பாலிவுட் நட்சத்திரங்கள் சையிப் அலி கான் மற்றும் ஜான்வி கபூர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். அனிருத்தின் அதிரடி பாடல்களும் டிரெய்லரும் ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், செப்டம்பர் 27 அன்று சர்வதேச அளவில் வெளியாகும் தேவரா படத்திற்கு உலகெங்கும் சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. என்டிஆர் ஆர்ட்ஸ் மற்றும் யுவசுதா ஆர்ட்ஸ் தயாரித்துள்ள இப்படம் பான் இந்திய அளவில் மிக பிரம்மாண்டமாக வெளிவருகிறது. ஜூனியர் என்டிஆரின் ஆக்ஷன் காட்சிகளைக் காண ரசிகர்கள் ஆர்வத்துடன் நாட்களை எண்ணி வருகின்றனர்.

· Hamsinient

பழைய செய்திகள்