தேவரா உலகளாவிய பிரீமியர் நேரங்கள் அறிவிப்பு: உற்சாகத்தில் ஜூனியர் என்டிஆர் ரசிகர்கள்!

தேவரா உலகளாவிய பிரீமியர் நேரங்கள் அறிவிப்பு: உற்சாகத்தில் ஜூனியர் என்டிஆர் ரசிகர்கள்!

ஜூனியர் என்டிஆர் நடிப்பில் உருவாகியுள்ள தேவரா திரைப்படத்தின் உலகளாவிய பிரீமியர் காட்சி நேரங்கள் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளன. சர்வதேச விநியோகஸ்தரான ஹம்சினி என்டர்டெயின்மென்ட் நிறுவனம் தனது எக்ஸ் பக்கத்தில் உலகம் முழுதும் உள்ள ரசிகர்களுக்காக விரிவான காட்சி நேர அட்டவணையை வெளியிட்டுள்ளது. கொரட்டலா சிவா இயக்கத்தில் உருவாகியுள்ள இப்படத்தில் ஜூனியர் என்டிஆருடன் ஜான்வி கபூர் ஜோடியாக நடித்துள்ளார். அனிருத்தின் பின்னணி இசை ஏற்கனவே பாடல்கள் மூலம் பட்டையைக் கிளப்பியுள்ள நிலையில், வெளிநாடுகளில் முதல் காட்சியைக் காண ரசிகர்கள் தீவிரமாக முன்பதிவு செய்து வருகின்றனர். அமெரிக்கா, ஐரோப்பா, வளைகுடா நாடுகள் என உலகெங்கும் பிரீமியர் காட்சிகளுக்கு அபரிமிதமான வரவேற்பு கிடைத்துள்ளது. கடலோர சண்டைக்காட்சிகளும் விறுவிறுப்பான ஆக்ஷன் காட்சிகளும் நிறைந்த தேவரா திரைப்படம் பெரிய திரையில் அசத்தலான அனுபவத்தை தரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

· Hamsinient

பழைய செய்திகள்