கதாநாயகனாக களமிறங்கும் ராக்ஸ்டார் தேவி ஸ்ரீ பிரசாத்: 'எல்லம்மா' படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு

கதாநாயகனாக களமிறங்கும் ராக்ஸ்டார் தேவி ஸ்ரீ பிரசாத்: 'எல்லம்மா' படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு

தென்னிந்திய திரையுலகின் முன்னணி இசையமைப்பாளரான ராக்ஸ்டார் தேவி ஸ்ரீ பிரசாத் கதாநாயகனாக அறிமுகமாகும் 'எல்லம்மா' திரைப்படத்தின் ரிலீஸ் தேதி குறித்த அதிரடி அறிவிப்பை சினிமா மக்கள் தொடர்பாளர் வம்சி சேகர் எக்ஸ் தளத்தில் பகிர்ந்துள்ளார். உணர்வுப்பூர்வமான 'பலகம்' திரைப்படத்தை இயக்கி மிகப்பெரிய பாராட்டுகளைப் பெற்ற வேணு எல்டண்டி இயக்கத்தில் இப்படம் உருவாகிறது. இப்படத்தில் தேவி ஸ்ரீ பிரசாத் 'பார்ஷி' என்ற அழுத்தமான கிராமத்து முதன்மை கதாபாத்திரத்தில் நடிக்கிறார். தமிழ் மற்றும் தெலுங்கில் புஷ்பா, சிங்கம், சச்சின் உள்ளிட்ட எண்ணற்ற பிளாக்பஸ்டர் திரைப்படங்களுக்கு இசையமைத்து, துள்ளலான மேடை நடனங்களால் பல கோடி ரசிகர்களைக் கட்டிப்போட்ட தேவி ஸ்ரீ பிரசாத், முதல்முறையாக கதாநாயகனாக நடிக்கவிருப்பது தென்னிந்திய சினிமா ரசிகர்களிடையே பெருத்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. கிராமியப் பின்னணியில் மண்ணின் மணமும் உணர்வுகளும் கலந்த திரைக்கதையுடன் உருவாகும் 'எல்லம்மா' திரைப்படம் 2027 ஆம் ஆண்டு மார்ச் 5 அன்று உலகமெங்கும் உள்ள திரையரங்குகளில் வெளியாகும் என படக்குழுவினர் அதிகாரப்பூர்வமாக உறுதி செய்துள்ளனர்.

· Ursvamsishekar

பழைய செய்திகள்