ஹீரோவாக களமிறங்கும் ராக்ஸ்டார் தேவி ஸ்ரீ பிரசாத்: 'எல்லம்மா' படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு!
தென்னிந்தியத் திரையுலகின் முன்னணி இசையமைப்பாளரான ராக்ஸ்டார் தேவி ஸ்ரீ பிரசாத் கதாநாயகனாக அறிமுகமாகும் புதிய திரைப்படம் 'எல்லம்மா'. மண்ணின் மணமும் கிராமத்து வாழ்வியலும் நிறைந்த ரா மற்றும் ரஸ்டிக் திரைப்படமாக உருவாகும் இப்படத்தின் வெளியீட்டுத் தேதியை விஜயதசமி தினத்தில் படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. இப்படம் வரும் 2027-ஆம் ஆண்டு மார்ச் 5 அன்று உலகம் முழுவதும் திரையரங்குகளில் பிரம்மாண்டமாக வெளியாக உள்ளது. தனது துள்ளலான இசையால் ரசிகர்களை ஆட்டம் போட வைத்த தேவி ஸ்ரீ பிரசாத், முதல் முறையாக ஒரு அழுத்தமான கிராமத்துக் கதையில் நாயகனாக நடிப்பது சினிமா ரசிகர்களிடையே பெருத்த ஆச்சரியத்தையும் எதிர்பார்ப்பையும் ஏற்படுத்தியுள்ளது. அசத்தலான போஸ்டருடன் வெளியான இந்த அறிவிப்பு, சமூக வலைத்தளங்களில் ரசிகர்களால் உற்சாகமாகக் கொண்டாடப்பட்டு வருகிறது. தேவி ஸ்ரீ பிரசாத்தின் திரைப்பயணத்தில் புதிய தொடக்கமாக அமையவுள்ள இப்படத்தின் கூடுதல் விவரங்கள் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
· Ursvamsishekar