பூஜையுடன் தொடங்கியது தனுஷ் 54 படப்பிடிப்பு: விக்னேஷ் ராஜா இயக்கத்தில் பிரம்மாண்ட தொடக்கம்!
தமிழ் சினிமாவின் முன்னணி நட்சத்திரமான நடிகர் தனுஷின் 54-வது திரைப்படத்தின் படப்பிடிப்பு பூஜையுடன் இனிதே தொடங்கியுள்ளதாக தயாரிப்பு நிறுவனமான வேல்ஸ் பிலிம் இன்டர்நேஷனல் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. நீண்ட நாட்களாக எதிர்பார்க்கப்பட்ட இந்த பிரம்மாண்ட படத்தின் தொடக்க நிகழ்வு புகைப்படங்களையும் தயாரிப்பு நிறுவனம் தனது எக்ஸ் பக்கத்தில் பகிர்ந்துகொண்டது. சென்சேஷனல் கிரைம் திரில்லர் படமான 'போர் தொழில்' மூலம் முத்திரை பதித்த இயக்குநர் விக்னேஷ் ராஜா இப்படத்தை இயக்குகிறார். 'பிரேமலு' புகழ் மமிதா பைஜூ கதாநாயகியாக நடிக்க, மூத்த நடிகர் ஜெயராம், கே.எஸ். ரவிகுமார் உள்ளிட்ட முன்னணி நடிகர்கள் இதில் இணைகின்றனர். படத்திற்கு ஜி.வி. பிரகாஷ் குமார் இசையமைக்க, தேசிய விருது வென்ற ஒளிப்பதிவாளர் தேனி ஈஸ்வர் ஒளிப்பதிவை கவனிக்கிறார். தனுஷின் அசாத்திய நடிப்புத் திறமைக்குத் தீனி போடும் வகையில் ஒரு வித்தியாசமான புலனாய்வு மற்றும் குடும்ப பின்னணி கதையை விக்னேஷ் ராஜா தயார் செய்துள்ளார் என்று கோலிவுட் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. படப்பிடிப்பு தற்போது சென்னையில் மும்முரமாகத் தொடங்கியுள்ள நிலையில், ரசிகர்கள் இந்த புதிய கூட்டணிக் குறித்து உற்சாகத்துடன் பேசி வருகின்றனர்.
· VelsFilmIntl