மிரட்டலான லுக்கில் தனுஷ்: ‘கேப்டன் மில்லர்’ ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியானது!

மிரட்டலான லுக்கில் தனுஷ்: ‘கேப்டன் மில்லர்’ ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியானது!

நடிகர் தனுஷ் நடிப்பில் அருண் மாதேஸ்வரன் இயக்கும் 'கேப்டன் மில்லர்' திரைப்படத்தின் அனல் பறக்கும் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை தனுஷ் தனது அதிகாரப்பூர்வ எக்ஸ் தளத்தில் வெளியிட்டுள்ளார். 'சுயமரியாதையே சுதந்திரம்' என்ற கம்பீரமான வாசகத்துடன் இந்த போஸ்டர் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது. வெளியான போஸ்டரில், போர்க்களத்தில் வீழ்ந்து கிடக்கும் சடலங்களுக்கு இடையே கையில் அதிநவீன துப்பாக்கியுடன் நீண்ட முடி மற்றும் தாடியுடன் தனுஷ் அனல் பறக்கும் ஆக்ரோஷமான தோற்றத்தில் காட்சியளிக்கிறார். 1930களின் பின்னணியில் நடக்கும் வரலாற்று ஆக்ஷன் திரைப்படமாக உருவாகும் இப்படத்தில் பிரியங்கா மோகன், சிவராஜ்குமார் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். ஜி.வி. பிரகாஷ் குமார் படத்திற்கு இசையமைக்கிறார். சத்யஜோதி பிலிம்ஸ் தயாரிக்கும் கேப்டன் மில்லர் திரைப்படம் ரசிகர்களுக்கு முற்றிலும் மாறுபட்ட அதிரடி திரையரங்க அனுபவத்தைக் கொடுக்கும் என திரையுலக வட்டாரங்களில் பேசப்பட்டு வருகிறது.

· Shibuthameens

பழைய செய்திகள்