கேரளாவில் ஹவுஸ்புல் காட்சிகளுடன் தனுஷின் கேப்டன் மில்லர்: பொங்கல் ரிலீஸுக்கு அமோக வரவேற்பு!
அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் தனுஷ் நடிப்பில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு வெளியான 'கேப்டன் மில்லர்' திரைப்படம் கேரள திரையரங்குகளில் அரங்கு நிறைந்த காட்சிகளுடன் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது. கேரள பிஆர்ஓ பிரதீஷ் சேகர் திரையரங்கு வரவேற்பு புகைப்படங்களை தனது எக்ஸ் பக்கத்தில் பகிர்ந்து இந்த வெற்றியை வெளிப்படுத்தியுள்ளார். பிரிட்டிஷ் கால பின்னணியில் தீவிரமான ஆக்ஷன் திரைப்படமாக உருவான இப்படத்தில் தனுஷின் அனல் பறக்கும் நடிப்புக்கும் அருண் மாதேஸ்வரனின் தனித்துவ மேக்கிங்கிற்கும் கேரள ரசிகர்கள் அமோக வரவேற்பு அளித்துள்ளனர். சிவ ராஜ்குமார், சந்தீப் கிஷன், பிரியங்கா மோகன் உள்ளிட்டோர் முக்கிய வேடங்களில் நடிக்க, ஜி.வி. பிரகாஷ் குமாரின் அசுரத்தனமான பின்னணி இசை படத்திற்கு கூடுதல் பலம் சேர்த்துள்ளது. தமிழ்நாடு மட்டுமின்றி அண்டை மாநிலமான கேரளாவிலும் கேப்டன் மில்லர் படத்திற்கான திரையரங்கு ஆதரவு தொடர்ந்து அதிகரித்து வருவது படக்குழுவினரையும் தனுஷ் ரசிகர்களையும் மிகுந்த உற்சாகத்தில் ஆழ்த்தியுள்ளது. திரையரங்குகளில் ரசிகர்கள் கைதட்டி கொண்டாடி வருகின்றனர்.
· Propratheesh