தனுஷ், வடிவேலு, எஸ்.ஜே.சூர்யா கூட்டணியில் #D56: பிரம்மாண்ட துவக்க கிளிம்ப்ஸ் வெளியீடு!

தனுஷ், வடிவேலு, எஸ்.ஜே.சூர்யா கூட்டணியில் #D56: பிரம்மாண்ட துவக்க கிளிம்ப்ஸ் வெளியீடு!

நடிகர் தனுஷின் 56-வது திரைப்படத்தின் படப்பிடிப்பு துவக்க விழா கிளிம்ப்ஸ் வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது. சித்தாரா என்டர்டெயின்மென்ட்ஸ் தயாரிப்பில் உருவாகும் இத்திரைப்படம் 2027 கோடைக் காலத்தில் வெளியாகும் என்று படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. இப்படத்தை விஜய் பி. குமார் இயக்குகிறார். தனுஷுடன் வைகைப் புயல் வடிவேலு, எஸ்.ஜே.சூர்யா மற்றும் ப்ரீத்தி முகுந்தன் ஆகியோர் இணைந்து நடிக்கின்றனர். சென்சேஷன் இசையமைப்பாளர் சாய் அபயங்கர் இந்த படத்திற்கு இசையமைக்கிறார். தனுஷ், வடிவேலு மற்றும் எஸ்.ஜே.சூர்யா ஆகிய மூவரும் இணையும் படம் இது என்பதால் ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. வெளியாகி உள்ள பூஜை வீடியோவில் நடிகர்களின் உற்சாகமான தோற்றம் இடம்பெற்றுள்ளது. ஸ்ரீகரா ஸ்டுடியோஸ் மற்றும் பிரைமார்க் புரொடக்ஷன்ஸ் நிறுவனங்களுடன் இணைந்து வம்சி இப்படத்தை தயாரிக்கிறார். சுவாரசியமான நட்சத்திரப் பட்டாளத்துடன் தொடங்கும் இந்த புதிய பயணம் கோலிவுட் வட்டாரத்தில் தற்போதே உற்சாகப் பேச்சாக மாறியுள்ளது.

· Only Kollywood

பழைய செய்திகள்