மனதை வருடும் 'மறுவார்த்தை பேசாதே': 20 வினாடி வீடியோ புரோமோவை அறிவித்த எனை நோக்கி பாயும் தோட்டா குழு!

மனதை வருடும் 'மறுவார்த்தை பேசாதே': 20 வினாடி வீடியோ புரோமோவை அறிவித்த எனை நோக்கி பாயும் தோட்டா குழு!

தனுஷ் மற்றும் மேகா ஆகாஷ் நடிப்பில் உருவான 'எனை நோக்கி பாயும் தோட்டா' திரைப்படத்தில் இடம்பெற்ற 'மறுவார்த்தை பேசாதே' பாடல் பட்டிதொட்டியெங்கும் பிரம்மாண்ட வெற்றியைப் பெற்றது. இந்நிலையில், இப்பாடலின் 20 வினாடி பிரத்யேக வீடியோ புரோமோ நாளை மாலை 7 மணிக்கு வெளியாகும் என்று படக்குழு அறிவித்துள்ளது. வேல்ஸ் ஃபிலிம் இண்டர்நேஷனல் மற்றும் ஒன்றாகா என்டர்டெயின்மென்ட் நிறுவனங்கள் இணைந்து தயாரித்துள்ள இப்படத்தை கௌதம் வாசுதேவ் மேனன் இயக்கியுள்ளார். ஆரம்பத்தில் இசையமைப்பாளர் யார் என்ற சஸ்பென்ஸுடன் வெளியாகி, பின்னர் தர்புகா சிவா என்று அறிவிக்கப்பட்ட இப்பாடல் மில்லியன் கணக்கான பார்வைகளைக் கடந்து சாதனை படைத்தது. சித் ஸ்ரீராமின் வசீகரக் குரல் இப்பாடலை வேறொரு தளத்திற்குக் கொண்டு சென்றது. படம் நவம்பர் 29 அன்று வெளியாக உள்ள நிலையில், திரையில் இப்பாடலின் காட்சிகளை எப்படிப் படமாக்கியிருக்கிறார்கள் என்பதைப் பார்க்க ரசிகர்கள் காத்திருக்கின்றனர். நாளை வெளியாகும் புரோமோ வீடியோ படத்தின் மீதான எதிர்பார்ப்பை மேலும் எகிற வைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

· VelsFilmIntl

பழைய செய்திகள்