தனுஷ், மம்மூட்டி, சாய் பல்லவி இணையும் 'ஓம்': நவம்பர் 20ல் திரையரங்குகளில் உலகளாவிய ரிலீஸ்!
தனுஷ், மம்மூட்டி மற்றும் சாய் பல்லவி ஆகியோர் நடிப்பில் ராஜ்குமார் பெரியசாமி இயக்கும் 'ஓம்' (OM) திரைப்படம் வரும் நவம்பர் 20 அன்று உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகிறது. "பயணிகளின் அன்பான கவனத்திற்கு... இலக்கு ஓம்" என்ற சுவாரசியமான வாசகத்துடன் இந்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வீடியோ வெளியாகியுள்ளது. ஸ்ரீலீலா, நசீருதீன் ஷா, இந்திரன்ஸ் என இந்திய சினிமாவின் முன்னணி நட்சத்திரப் பட்டாளமே இப்படத்தில் இணைந்துள்ளது. 'அமரன்' படத்தின் பிரம்மாண்ட வெற்றிக்குப் பிறகு ராஜ்குமார் பெரியசாமியும், தொடர் வெற்றிகளை குவித்து வரும் தனுஷும் இணையும் இக்கூட்டணிக்கு சாய் அபயங்கர் இசையமைக்கிறார். வுண்டர்பார் பிலிம்ஸ் மற்றும் ஆர் டேக் ஸ்டுடியோஸ் தயாரிப்பில் உருவாகும் இத்திரைப்படம் இந்த ஆண்டின் மிகவும் எதிர்பார்க்கப்படும் படைப்புகளில் ஒன்றாக மாறியுள்ளது. நட்சத்திரங்களின் அசத்தலான நடிப்பை பெரிய திரையில் காண ரசிகர்கள் பெரும் ஆவலுடன் காத்திருக்கின்றனர்.
· Actor Kayal Devaraj