முத ராத்திரி படக்குழுவினரை நேரில் சந்தித்துப் பாராட்டிய தனுஷ்: உற்சாகத்தில் தயாரிப்பாளர்கள்!

முத ராத்திரி படக்குழுவினரை நேரில் சந்தித்துப் பாராட்டிய தனுஷ்: உற்சாகத்தில் தயாரிப்பாளர்கள்!

மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரிப்பில் வெளியாகி திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கும் 'முத ராத்திரி' திரைப்படக் குழுவினரை நடிகர் தனுஷ் நேரில் சந்தித்து தனது மனமார்ந்த பாராட்டுகளைத் தெரிவித்துள்ளார். ராஜா கருப்பசாமி இயக்கத்தில் ரிஷிகாந்த் மற்றும் அனிஷ்மா அனில்குமார் நடிப்பில் உருவான இப்படம் எதார்த்தமான நகைச்சுவை மற்றும் கிராமத்துக் குடும்பப் பின்னணியுடன் திரையரங்குகளில் குடும்ப ரசிகர்களைப் பெருமளவில் கவர்ந்துள்ளது. படத்தை நேரில் பார்த்து ரசித்த தனுஷ், படக்குழுவினர் ஒவ்வொருவரையும் தனித்தனியாகப் பாராட்டி வாழ்த்தியது படக்குழுவினரை உற்சாகத்தில் ஆழ்த்தியுள்ளது. நடிகர் தனுஷின் வாழ்த்து தங்களுக்கு மிகப்பெரிய அங்கீகாரம் என படக்குழுவினர் நெகிழ்ச்சியுடன் தெரிவித்தனர். தனுஷின் இந்த எதிர்பாராத வாழ்த்து படக்குழுவினருக்கு மிகப்பெரிய மகிழ்ச்சியை அளித்துள்ளதுடன், தற்போது அனைத்து முன்னணி திரையரங்குகளிலும் இப்படத்திற்கான டிக்கெட் முன்பதிவு விறுவிறுப்பாக நடைபெற்று வருவதாக தயாரிப்பு நிறுவனம் தெரிவித்துள்ளது. வார இறுதி நாட்களில் குடும்பங்கள் கூட்டம் கூட்டமாக திரையரங்குகளுக்கு வருகை தருகின்றனர்.

· Idiamondbabu

பழைய செய்திகள்