கேரளாவில் தனுஷின் ஓ.எம் முன்பதிவு வேகம்: புக்மைஷோவில் ஒரே மணி நேரத்தில் 8000 டிக்கெட்டுகள் விற்பனை!
தனுஷ் நடித்துள்ள ஓ.எம் (Operation Mole) திரைப்படத்தின் கேரள முன்பதிவு தொடங்கிய சில மணி நேரங்களிலேயே சினிமா ரசிகர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது. தொடக்கமாக குறைந்த எண்ணிக்கையிலான திரையரங்குகளுக்கு மட்டுமே முன்பதிவு திறக்கப்பட்ட நிலையிலும், 25 லட்ச ரூபாயை வசூல் கடந்துள்ளதாக மலையாளம் ரிவ்யூ தளம் தனது எக்ஸ் தளத்தில் தெரிவித்துள்ளது. குறிப்பாக புக்மைஷோ தளத்தில் கடந்த ஒரு மணி நேரத்தில் மட்டும் 8000-க்கும் மேற்பட்ட டிக்கெட்டுகள் மின்னல் வேகத்தில் விற்றுத் தீர்ந்துள்ளன. ராஜ்குமார் பெரியசாமியின் ஆக்ஷன் காட்சிகள் மீதான எதிர்பார்ப்பும், தனுஷின் மிரட்டலான தோற்றமும் இணைந்து ரசிகர்களை முன்பதிவு செய்ய தூண்டியுள்ளது. பல முக்கிய நகர திரையரங்குகளில் முதல் நாள் காட்சிகள் வேகமாக ஹவுஸ்புல் போர்டை நோக்கி நகர்ந்து கொண்டிருக்கின்றன. நவம்பர் 20 அன்று உலகம் முழுவதும் திரைக்கு வரவுள்ள இப்படத்திற்கு கூடுதல் திரையரங்குகள் ஒதுக்கப்பட்டு வருவதால், கேரளாவில் தனுஷுக்கு இது மிகப்பெரிய தொடக்க நாள் வசூலைத் தேடித்தரும் என திரையரங்கு உரிமையாளர்கள் மகிழ்ச்சியுடன் தெரிவிக்கின்றனர்.
· MalayalamReview