கேரளாவில் தொடங்கும் தனுஷின் 'ஓம்' முன்பதிவு: நவம்பர் 20 காலை 6 மணிக்கே முதல் காட்சி!
தனுஷ் நடிப்பில் உருவாகியுள்ள 'ஓம்' திரைப்படத்திற்கான கேரள மாநில முன்பதிவு நாளை மாலை 7 மணிக்கு தொடங்க உள்ளதாக மலையாளம் ரிவ்யூ எக்ஸ் தளத்தில் அதிகாரப்பூர்வமாகத் தெரிவித்துள்ளது. மேலும் வரும் நவம்பர் 20 அன்று அதிகாலை 6 மணிக்கே கேரள திரையரங்குகளில் முதல் நாள் முதல் காட்சி (FDFS) திரையிடப்பட உள்ளது. இப்படத்தின் பாடல்கள், டிரெய்லர் மற்றும் புரமோஷன் வீடியோக்கள் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் ஏற்கனவே எக்கச்சக்க எதிர்பார்ப்பை கிளப்பியுள்ளன. தமிழ்நாட்டைப் போலவே கேரளாவிலும் தனுஷுக்கு மிகப்பெரிய ரசிகர் பட்டாளம் உள்ளதால், அதிகாலை சிறப்பு காட்சிகளுக்கான டிக்கெட்டுகளை கைப்பற்ற ரசிகர்கள் மிகுந்த ஆர்வத்துடன் தயாராகி வருகின்றனர். இயக்குநர் மற்றும் நடிகர் என பன்முகத்திறமை கொண்ட தனுஷின் புதிய படைப்பான 'ஓம்' திரைப்படம் நவம்பர் 20 அன்று உலகமெங்கும் வெளியாகவுள்ள நிலையில், கேரள பாக்ஸ் ஆபிசிலும் மிகப்பெரிய வசூல் தொடக்கத்தைப் பெறும் என விநியோகஸ்தர்கள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.
· MalayalamReview