அமரன் படப்பிடிப்பின் போதே உருவான தனுஷ் கூட்டணி: ஓம் உருவான ரகசியம் உடைத்த ராஜ்குமார் பெரியசாமி
நடிகர் தனுஷுடன் 'ஓம்' படத்திற்காக இணைந்தது எப்படி என்பது பற்றி இயக்குநர் ராஜ்குமார் பெரியசாமி மனம் திறந்து பேசியுள்ளார். சிவகார்த்திகேயன் நடித்த 'அமரன்' படத்தின் படப்பிடிப்பு பாதியில் நடந்துகொண்டிருந்த போதே தனக்கு தனுஷை சந்திக்கும் வாய்ப்பு கிடைத்ததாக அவர் குறிப்பிட்டுள்ளார். அப்போது தனது அடுத்த படத்திற்கான கதைகளைத் தேடிக்கொண்டிருந்த தனுஷிடம், 'ரங்கூன்' படத்தின் போது யோசித்து வைத்திருந்த ஒரு சுவாரசியமான கதைக் கருவை இயக்குநர் கூறியுள்ளார். அந்த முழு திரைக்கதையும் கேட்ட தனுஷ் உடனடியாக வியந்து தயாரிப்பாளராகவும் களமிறங்கினார். நடிகர்களை தேர்வு செய்வதிலும், உண்மை களங்களில் நேரில் படப்பிடிப்பு நடத்துவதிலும் தனக்கு தனுஷ் முழு படைப்புச் சுதந்திரம் அளித்ததாக ராஜ்குமார் நெகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளார். வொண்டர்பார் பிலிம்ஸ் தயாரிப்பில் வித்தியாசமான கதைக்களத்துடன் உருவாகும் ஓம் படம் அடுத்த கட்டத்தை நோக்கி விறுவிறுப்பாக நகர்ந்து வருகிறது.
· @_movietamil