ஓம் படத்தில் ஐந்து ஹீரோக்கள் இருக்கிறார்கள்: பிரீ ரிலீஸ் விழாவில் தனுஷ் உற்சாக உரை!

நடிகர் தனுஷ் நடிப்பில் உருவாகியுள்ள 'ஓம்' திரைப்படத்தின் பிரீ ரிலீஸ் விழா சென்னையில் கோலாகலமாக நடைபெற்றது. இதில் கலந்துகொண்டு பேசிய தனுஷ், இந்தப் படம் ஒரு மல்டி ஸ்டாரர் திரைப்படம் மட்டுமல்ல, ஐந்து ஹீரோக்கள் கொண்ட கதைக்களம் என்று பெருமிதத்தோடு குறிப்பிட்டார். மேடையில் பேசிய அவர், 'இப்படத்தில் மம்மூட்டி சார், சாய் பல்லவி, ஸ்ரீலீலா, இசையமைப்பாளர் சாய் அபயங்கர், இறுதியாக நான் என மொத்தம் ஐந்து பேர் ஹீரோக்களாக நடித்திருக்கிறோம். இயக்குநர் ராஜ்குமார் பெரியசாமிக்கு தன் கதையின் மீதும் திறமையின் மீதும் அபார நம்பிக்கை உள்ளது. குழுவினரிடம் இருந்து மிகச் சிறந்த உழைப்பை எப்படிப் பெறுவது என்பதும், ரசிகர்களுக்கு என்ன தேவை என்பதும் அவருக்குத் துல்லியமாகத் தெரியும்' என்றார். மேலும் படத்தின் விறுவிறுப்பான கதைக்கு 'அலாகா லூவா' பாடல் தேவையில்லை என்றாலும், ரசிகர்களுக்காக என்னை ஆட வைக்க வேண்டும் என்ற நோக்கில் இயக்குநர் அந்தப் பாடலைச் சேர்த்ததாக தனுஷ் பகிர்ந்தார். இயக்குநர் ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் உருவாகியுள்ள 'ஓம்' திரைப்படம் வரும் நவம்பர் 20 அன்று உலகமெங்கும் திரையரங்குகளில் வெளியாகிறது.

· @_movietamil

பழைய செய்திகள்