'தெய்வா' படத்தின் ஆன்மாவான 'யார் இவன்' பாடல்: நாளை மாலை 6 மணிக்கு வெளியாகிறது!
உணவு என்பது வெறும் சமையல் குறிப்பு மட்டுமல்ல, அது ஒரு ஆழமான உணர்வு என்கிற சுவாரசியமான தத்துவக் குறிப்புடன், 'தெய்வா' திரைப்படத்தின் அடுத்த பாடல் அறிவிப்பு வெளியாகியுள்ளது. இப்படத்தின் ஆன்மாவாகக் கருதப்படும் 'யார் இவன்' என்கிற பாடல் நாளை மாலை 6 மணிக்கு வெளியாகும் என்று படக்குழுவினர் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர். இப்பாடலை முன்னணி பின்னணிப் பாடகர் விஜய் நரேன் பாடியுள்ளது இசை ஆர்வலர்கள் மத்தியில் எதிர்பார்ப்பை அதிகப்படுத்தியுள்ளது. பாலா சுப்ரமணியம் மற்றும் சாந்தகுமார் சந்திரமோகன் ஆகியோர் கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்கும் இப்படத்தை கிரிப்டான் ஸ்டுடியோஸ் மற்றும் அஸ்பா ஸ்டுடியோஸ் இணைந்து தயாரிக்கின்றன. டிடியின் மனதைத் தொடும் மெல்லிசையில் இப்பாடல் உருவாகியுள்ளது. உணவின் பின்னணியில் மனித உணர்வுகளையும் உறவுகளையும் பேசும் கதையம்சத்தைக் கொண்டுள்ள 'தெய்வா' திரைப்படத்தின் இந்த 'யார் இவன்' பாடல், லஹரி மியூசிக் யூடியூப் தளத்தில் நாளை மாலை வெளியாகவுள்ளது. விஜய் நரேனின் வசீகரக் குரலில் வெளியாகும் இப்பாடல் ரசிகர்களுக்கு மனதை வருடும் அனுபவமாக அமையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
· Idiamondbabu