இந்தியா முழுவதும் செப்டம்பர் 25 அன்று ரிலீசாகும் 'தூமகேது': ஏபி இன்டர்நேஷனல் அறிவிப்பு!
நகைச்சுவை மற்றும் எதிர்பாராத திருப்பங்கள் நிறைந்த 'தூமகேது' திரைப்படத்தை கேரளாவைத் தவிர்த்து இந்தியா முழுவதும் உள்ள பிற மாநில திரையரங்குகளில் வரும் செப்டம்பர் 25 முதல் வெளியிட உள்ளதாக ஏபி இன்டர்நேஷனல் நிறுவனம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. இப்படத்தில் நிகிலா விமல், ஷைன் டாம் சாக்கோ, சஜின் கோபு, கணபதி உள்ளிட்ட திறமையான நடிகர்கள் இணைந்து நடித்துள்ளனர். ஹேப்பி ஹவர்ஸ் என்டர்டெயின்மென்ட்ஸ் மற்றும் ஏ&எச்எஸ் புரொடக்ஷன்ஸ் இணைந்து தயாரித்துள்ள இப்படத்தை சுதி மேடிசன் இயக்கியுள்ளார். சிறந்த நகைச்சுவை நடிகர்களின் கூட்டணி என்பதால் காட்சிகளில் சிரிக்க வைக்கும் தருணங்கள் அதிகளவில் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. சமீபத்தில் வெளியான இப்படத்தின் டிரெய்லர் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்ற நிலையில், செப்டம்பர் 25 அன்று திரையரங்குகளில் வெளியாகும் இப்படம் பிற மொழி சினிமா ரசிகர்களுக்கும் நல்ல சிரிப்பு விருந்தாக அமையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
· Apifilms