இன்று முதல் இந்தியா முழுவதும் திரையரங்குகளில்: நிகிலா விமலின் தூமகேது படத்தை வெளியிடும் ஏபி இன்டர்நேஷனல்!

இன்று முதல் இந்தியா முழுவதும் திரையரங்குகளில்: நிகிலா விமலின் தூமகேது படத்தை வெளியிடும் ஏபி இன்டர்நேஷனல்!

நிகிலா விமல் மற்றும் ஷைன் டாம் சாக்கோ ஆகியோர் முதன்மை கதாபாத்திரங்களில் நடித்துள்ள மலையாள நகைச்சுவை திரைப்படமான 'தூமகேது' கேரளா தவிர்த்த இந்தியா முழுவதும் இன்று திரையரங்குகளில் வெளியாகியுள்ளது என விநியோக நிறுவனமான ஏபி இன்டர்நேஷனல் எக்ஸ் தளத்தில் தெரிவித்துள்ளது. டைம் லூப் பின்னணியில் நகைச்சுவை கலந்த திரைக்கதையோடு உருவாகியுள்ள இந்த திரைப்படத்தை ஹேப்பி ஹவர்ஸ் என்டர்டெயின்மென்ட்ஸ் மற்றும் ஏஎச்எஸ் புரொடக்‌ஷன்ஸ் இணைந்து தயாரித்துள்ளது. நிகிலா விமலின் கலகலப்பான நடிப்பும் ஷைன் டாமின் பிரத்யேக பாணியும் இப்படத்திற்கு கூடுதல் பலம் சேர்த்துள்ளது. கேரளாவில் நல்ல வரவேற்பைப் பெற்று வரும் இத்திரைப்படம், தமிழ்நாட்டிலும் பெங்களூரு, மும்பை போன்ற முக்கிய நகரங்களிலும் இன்று முதல் திரையிடப்படுகிறது.

· Apifilms

பழைய செய்திகள்