பிறந்தநாள் கொண்டாடும் துருவ் விக்ரம்: தெலுங்கிலும் வெளியானது ஜாக்கி ஃபர்ஸ்ட் மூவ்!

பிறந்தநாள் கொண்டாடும் துருவ் விக்ரம்: தெலுங்கிலும் வெளியானது ஜாக்கி ஃபர்ஸ்ட் மூவ்!

தமிழ் திரையுலகின் துடிப்பான இளம் நட்சத்திரமான நடிகர் துருவ் விக்ரமின் பிறந்தநாளையொட்டி, அவர் கதாநாயகனாக நடிக்கும் 'ஜாக்கி' திரைப்படத்தின் தயாரிப்பு நிறுவனமான மைத்ரி மூவி மேக்கர்ஸ் அவருக்கு அன்பான பிறந்தநாள் வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளது. மேலும் ரசிகர்களுக்கு உற்சாகமூட்டும் விதமாக இப்படத்தின் 'ஃபர்ஸ்ட் மூவ்' தெலுங்கு முன்னோட்ட வீடியோவும் மாலை 6 மணிக்கு அதிகாரப்பூர்வமாக வெளியிடப்பட்டுள்ளது. இயக்குநர் கரண் ஏ. குமார் இயக்கத்தில் தயாராகும் இப்படத்தில் துருவ் விக்ரம் முற்றிலும் மாறுபட்ட, அசுர வேகம் கொண்ட எனர்ஜி நிறைந்த கதாபாத்திரத்தில் நடிக்கிறார். அவருடன் இணைந்து படப்பிடிப்பில் பறக்கத் தொடங்குவதற்கு ஆவலுடன் காத்திருப்பதாக தயாரிப்பு நிறுவனம் தனது பதிவில் குறிப்பிட்டுள்ளது. இப்படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைத்து வருகிறார். ஆதித்யா வர்மா மற்றும் மகான் போன்ற வெற்றிப் படங்களில் தனது அபார நடிப்புத் திறமையை நிரூபித்த துருவ் விக்ரமிற்கு, இந்த 'ஜாக்கி' திரைப்படம் தென்னிந்திய அளவில் ஒரு பெரிய பாய்ச்சலாக அமையும் என்று கூறி ரசிகர்கள் இணையத்தில் வாழ்த்துகளைக் குவித்து வருகின்றனர்.

· @kollywoodscope

பழைய செய்திகள்