துருவ் விக்ரமின் ஜாக்கி அதிரடி ஆரம்பம்: 1 கோடி பார்வைகளைக் கடந்து சாதனை படைத்த First Move வீடியோ!
துருவ் விக்ரம் நடிப்பில் கரண் ஏ குமார் இயக்கத்தில் பிரம்மாண்டமாக உருவாகி வரும் 'ஜாக்கி' திரைப்படத்தின் அறிமுக முன்னோட்டமான 'First Move' வீடியோ, தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் 1 கோடிக்கும் அதிகமான டிஜிட்டல் பார்வைகளைப் பெற்று வைரலாகி வருகிறது. சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ள இப்படத்தில் துருவ் விக்ரம் முற்றிலும் மாறுபட்ட ஆக்ஷன் அவதாரத்தில் மிரட்டியுள்ளார். அவரது மாஸான திரை ஆளுமையும் ஸ்டைலான மேக்கிங்கும் இணையத்தில் இளசுகளை வெகுவாகக் கவர்ந்து எக்ஸ் தளத்தில் தேசிய அளவில் டிரெண்டாகி வருகிறது. விக்ரமின் மகனான துருவ் விக்ரமின் திரைப்பயணத்தில் இந்த ஆக்ஷன் த்ரில்லர் படம் ஒரு பெரிய கவனத்தை ஈர்க்கும் திருப்பமாக அமையும் என திரையுலக வட்டாரங்கள் மற்றும் ரசிகர்கள் மத்தியில் பலத்த எதிர்பார்ப்பு உருவாகியுள்ளது.
· Kollywood Ent