ஸ்டண்ட் டூப் வேடத்தில் அதிரடி காட்டும் துருவ் விக்ரம்: புதிய பரிசோதனை முயற்சியாக ஜாக்கி

ஸ்டண்ட் டூப் வேடத்தில் அதிரடி காட்டும் துருவ் விக்ரம்: புதிய பரிசோதனை முயற்சியாக ஜாக்கி

துருவ் விக்ரம் கதாநாயகனாக நடிக்கும் 'ஜாக்கி' திரைப்படத்தில் அவர் சினிமா ஸ்டண்ட் டூப் கலைஞராக வித்யாசமான கதாபாத்திரத்தில் நடிப்பது உறுதியாகியுள்ளது. சினிமாவில் ஆபத்தான காட்சிகளில் மற்ற நடிகர்களுக்காக நடிக்கும் டூப் கலைஞர்களின் வாழ்க்கையையும் அவர்களின் சாகசங்களையும் மையமாகக் கொண்ட இக்கதை கோலிவுட் வட்டாரத்தில் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. இயக்குநர் கரண் ஏ குமார் இயக்கும் இந்த பிரம்மாண்ட திரைப்படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைக்கிறார். மைத்திரி மூவி மேக்கர்ஸ் தயாரிக்கும் இப்படத்தில் துருவ் விக்ரமின் சுறுசுறுப்பான உடல்மொழி மற்றும் சண்டைப் பயிற்சிகள் ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பை உருவாக்கியுள்ளன. சமீபத்தில் வெளியான முன்னோட்டக் காட்சியில் துருவ் விக்ரம் பறந்து சண்டை போடும் காட்சிகள் இணையத்தில் வைரலாகி வருகின்றன. வித்யாசமான கதைக்களங்களைத் தேர்வு செய்து நடிக்கும் துருவ் விக்ரமுக்கு இந்த திரைப்படம் மிக முக்கியமான படமாக அமையும் என ரசிகர்கள் கருதுகின்றனர்.

· Kollywood Ent

பழைய செய்திகள்