இளையராஜா இசையமைக்கும் அபராஜித் ஃபிலிம்ஸ் படம்: இணைந்த பிரபல வசனகர்த்தா பாரதன்!

இளையராஜா இசையமைக்கும் அபராஜித் ஃபிலிம்ஸ் படம்: இணைந்த பிரபல வசனகர்த்தா பாரதன்!

இசைஞானி இளையராஜா இசையமைப்பில் உருவாகும் அபராஜித் ஃபிலிம்ஸ் நிறுவனத்தின் 'புரொடக்‌ஷன் நம்பர் 3' திரைப்படத்தில் பிரபல வசனகர்த்தா பாரதன் மற்றும் ஸ்டில்ஸ் பாலு ஆகியோர் அதிகாரப்பூர்வமாக இணைந்துள்ளனர். இந்தத் தகவலை மக்கள் தொடர்பாளர் நிகில் முருகன் அறிவித்துள்ளார். அஜித் நடித்த 'வீரம்' உள்ளிட்ட பல வெற்றிப் படங்களுக்கு வசனம் எழுதிய பாரதன் இப்படத்தில் இணைந்திருப்பது படத்தின் எதிர்பார்ப்பை உயர்த்தியுள்ளது. மேலும் அனுபவம் வாய்ந்த ஒளிப்படக் கலைஞர் பாலு இணைந்திருப்பது கூடுதல் பலமாக அமைந்துள்ளது. இளையராஜாவின் இசை மற்றும் அனுபவமிக்க கலைஞர்களின் கூட்டணியில் உருவாகும் இப்புதிய படத்தின் நடிகர் நடிகையர் மற்றும் படப்பிடிப்பு குறித்த விவரங்கள் விரைவில் வெளியாகவுள்ளன.

· Nikil Murukan

பழைய செய்திகள்