தில் ராஜு தயாரிப்பில் உருவாகும் ‘எல்லம்மா’: அதிகாரப்பூர்வ ரிலீஸ் தேதியை அறிவித்தது படக்குழு!

தில் ராஜு தயாரிப்பில் உருவாகும் ‘எல்லம்மா’: அதிகாரப்பூர்வ ரிலீஸ் தேதியை அறிவித்தது படக்குழு!

‘பலாகம்’ திரைப்படத்தின் மூலம் மிகப்பெரிய வெற்றியைப் பெற்ற இயக்குநர் வேணு எல்தண்டி இயக்கத்தில் உருவாகும் ‘எல்லம்மா’ திரைப்படத்தின் உலகளாவிய ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டுள்ளதாக சினிமா வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன. ஸ்ரீ வெங்கடேஸ்வரா கிரியேஷன்ஸ் சார்பில் தில் ராஜு மற்றும் சிரிஷ் தயாரிக்கும் இந்தப் படம் பான் இந்தியா முறையில் பிரம்மாண்டமாகத் தயாராகி வருகிறது. மண் சார்ந்த உணர்வுப்பூர்வமான கதையம்சத்துடன் உருவாகும் இத்திரைப்படத்திற்கு ராக்ஸ்டார் தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைக்கிறார். தசரா பண்டிகையை முன்னிட்டு வெளியிடப்பட்ட அதிகாரப்பூர்வ அறிவிப்பில், ‘எல்லம்மா’ திரைப்படம் வரும் 2027 ஆம் ஆண்டு மார்ச் 5 அன்று தமிழ், தெலுங்கு, இந்தி, கன்னடம் மற்றும் மலையாளம் ஆகிய ஐந்து மொழிகளில் உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. கிராமத்துப் பின்னணியில் குடும்ப உணர்வுகளும் ஆக்‌ஷனும் கலந்த கதையாக இது உருவாகி வருவதால், சினிமா ரசிகர்கள் மத்தியில் மிகுந்த எதிர்பார்ப்பு நிலவுகிறது. முதல்கட்ட பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில், அடுத்தடுத்த அப்டேட்கள் மற்றும் நட்சத்திரப் பட்டாளம் பற்றிய அறிவிப்புகள் விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

· Actor Kayal Devaraj

பழைய செய்திகள்