'யானை மரம்' படத்தின் டிரைலரைப் பாராட்டி போஸ்டரை வெளியிட்ட இயக்குனர் சேரன்: மாணவர்களுக்கான முக்கிய படம் என புகழாரம்!

'யானை மரம்' படத்தின் டிரைலரைப் பாராட்டி போஸ்டரை வெளியிட்ட இயக்குனர் சேரன்: மாணவர்களுக்கான முக்கிய படம் என புகழாரம்!

இயக்குனர் ராமையா ரவிச்சந்திரன் இயக்கத்தில் உருவாகியுள்ள 'யானை மரம்' திரைப்படத்தின் டிரைலரைப் பார்த்து நெகிழ்ந்த தென்னிந்திய திரைப்பட எழுத்தாளர்கள் சங்கத் தலைவரும் தேசிய விருது பெற்ற இயக்குனருமான சேரன், படத்தின் புதிய போஸ்டரை அதிகாரப்பூர்வமாக வெளியிட்டு படக்குழுவினரை மனதாரப் பாராட்டியுள்ளார். தன் உரிமைகளுக்காக துணிச்சலுடன் போராடும் ஒரு சிறுவனின் உணர்வுப்பூர்வமான கதையாக உருவாகியுள்ள இப்படம் பள்ளி மாணவர்கள் அனைவரும் தவறாமல் பார்க்க வேண்டிய ஒரு படைப்பு என்று சேரன் தனது வாழ்த்துச் செய்தியில் குறிப்பிட்டுள்ளார். இப்படத்தில் மாஸ்டர் அபினேஷ் முதன்மை பாத்திரத்தில் நடித்துள்ளார். அவருடன் ஜோதி கண்ணன், செம்புலி ஜெகன், ஜெயிலர் சீனு, ராணி உள்ளிட்ட பலர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். கதை, திரைக்கதை, வசனம் எழுதி இப்படத்தை ராமையா ரவிச்சந்திரன் இயக்கியுள்ளார். ஆர்.சசிகலா தயாரித்துள்ள இப்படத்திற்கு அரவிந்த் சித்தார்த்தா இசையமைத்துள்ளார். ஒரு எளிய மக்களின் வலியை பேசும் அழுத்தமான படைப்பாக உருவாகியுள்ள 'யானை மரம்' விரைவில் திரைக்கு வரவுள்ள நிலையில், இயக்குனர் சேரனின் இந்த பாராட்டு படக்குழுவினருக்கு பெரும் ஊக்கத்தை அளித்துள்ளது.

· Actor Kayal Devaraj

பழைய செய்திகள்