புதிய படத்திற்கான நடிகர் தேர்வு அறிவிப்பு: இயக்குநர் ஹரிஷ் துரைராஜின் அடுத்த ப்ராஜெக்ட்
கான்கிரீட் சிட்டி திரைப்படத்தின் மூலம் கவனம் ஈர்த்த இளம் இயக்குநர் ஹரிஷ் துரைராஜ், தனது அடுத்த புதிய திரைப்படத்திற்கான நடிகர், நடிகையர் தேர்வு குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டுள்ளார். இப்படத்தில் நடிக்க ஆர்வமுள்ள திறமையாளர்கள் தங்களின் சுயவிவரக் குறிப்பு மற்றும் புகைப்படங்களை hd02castingcall@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பலாம் என்றும், வாட்ஸ்அப் மூலம் 8248291898 என்ற எண்ணிற்கு அனுப்பலாம் என்றும் படக்குழு தெரிவித்துள்ளது. அழைப்புகளைத் தவிர்த்து தகவல்களை மட்டுமே அனுப்புமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது. திரைத்துறையில் சாதிக்கத் துடிக்கும் புதிய திறமைகளுக்கு வாய்ப்பளிக்கும் இந்த நடிகர் தேர்வு அறிவிப்பு, சினிமா ஆர்வலர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது.
· @_movietamil