ஹீரோவாக நடிக்க வாய்ப்பு கிடைத்தால் நடிப்பேன்: மனம் திறந்த இயக்குநர் ஜேசன் சஞ்சய்
தளபதி விஜய்யின் மகன் ஜேசன் சஞ்சய் லைகா புரொடக்ஷன்ஸ் தயாரிப்பில் இயக்கி வரும் 'சிக்மா' திரைப்படத்தின் மீதான எதிர்பார்ப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இப்படத்தில் தெலுங்கு மற்றும் தமிழ் சினிமாவில் பிரபல கதாநாயகனான சந்தீப் கிஷன் முன்னணி கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். சமீபத்திய நேர்காணல் ஒன்றில் பேசிய ஜேசன் சஞ்சய், படத்தின் கதாநாயகன் தேர்வு மற்றும் தனது எதிர்கால நடிப்பு திட்டம் குறித்து வெளிப்படையாகப் பேசியுள்ளார். சிக்மா படத்திற்காக பல நடிகர்களை அணுகியதாகவும், அப்போது சந்தீப் கிஷனை சந்தித்தபோது அவரது முந்தைய படைப்புகளின் தீவிர ரசிகனாக இருந்ததால் அவரே இக்கதைக்கு சரியான தேர்வாக அமைந்தார் என்றும் சஞ்சய் குறிப்பிட்டுள்ளார். மேலும் படத்தின் விளம்பரப் பாடலான 'சிக்மா ஸ்டைல்' பாடலின் முடிவில் தான் தோன்றியது குறித்து கேட்கப்பட்டதற்கு, எனக்கு நடிப்பில் ஆர்வம் இல்லை என்று நான் எப்போதும் சொன்னதில்லை, வாய்ப்பு கிடைத்தால் நிச்சயம் ஒரு படத்தில் நடிப்பேன் என்று புன்னகையுடன் தெரிவித்துள்ளார். இயக்குநராக அறிமுகமாகும் முதல் படத்திலேயே தனித்துவமான மேக்கிங் பாணியை வெளிப்படுத்தி வரும் ஜேசன் சஞ்சய், வருங்காலத்தில் வெள்ளித்திரையில் நடிகராகவும் வலம் வருவாரா என்ற எதிர்பார்ப்பு தளபதி ரசிகர்கள் மத்தியில் பெரும் உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது.
· @_movietamil