'மொத ராத்திரி' படக்குழுவிற்கு இயக்குநர் லோகேஷ் கனகராஜ் மனமார்ந்த வாழ்த்து

நடிகர் ரிஷிகாந்த் முதன்மை பாத்திரத்தில் நடித்து மைத்திரி மூவி மேக்கர்ஸ் தயாரிப்பில் அண்மையில் வெளியான குடும்பப் பொழுதுபோக்கு திரைப்படம் 'மொத ராத்திரி'. திரையரங்குகளில் வெளியாகி ரசிகர்களிடையே சிறப்பான வரவேற்பைப் பெற்று வரும் இப்படத்திற்கு முன்னணி இயக்குநர் லோகேஷ் கனகராஜ் தனது மனமார்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார். இப்படம் குறித்து தனது சமூக வலைத்தள பக்கத்தில் பதிவிட்டுள்ள லோகேஷ், மொத ராத்திரி திரைப்படத்திற்கு அனைத்து தரப்பு பார்வையாளர்களிடமிருந்தும் பேராதரவு கிடைத்து வருவதைக் கேட்டு மிகுந்த மகிழ்ச்சி அடைவதாகக் குறிப்பிட்டுள்ளார். கதாநாயகன் ரிஷிகாந்த், தயாரிப்பாளர்கள் நவீன் யெர்னேனி, ரவி சங்கர், இயக்குநர் ராஜா கருப்பசாமி மற்றும் படக்குழுவினர் அனைவருக்கும் தனது வாழ்த்துகளைப் பகிர்ந்துள்ளார். குடும்ப உறவுகளின் அழகையும் நகைச்சுவையையும் இயல்பாகப் பேசி ரசிகர்களின் மனதைக் கவர்ந்துள்ள இத்திரைப்படம் வெற்றிகரமாக திரையிடப்பட்டு வருகிறது. லோகேஷின் இந்த வாழ்த்துப் பதிவு படக்குழுவினருக்கு கூடுதல் உற்சாகத்தை அளித்துள்ளது.

· Dir_lokesh

பழைய செய்திகள்