ஒரே ஷாட்டில் படம் எடுத்து கின்னஸ் சாதனை படைத்த முகமது இஷாக்: பிறந்தநாளில் வாழ்த்திய நடிகர் கயல் தேவராஜ்!
தமிழ் திரையுலகில் ஒரே ஷாட்டில் (Single Shot Film) முழு திரைப்படத்தையும் படமாக்கி கின்னஸ் உலக சாதனை படைத்த 'அகடம்' திரைப்படத்தின் இயக்குநர் முகமது இஷாக்கின் பிறந்தநாளையொட்டி திரையுலகினர் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். நடிகர் கயல் தேவராஜ் தனது எக்ஸ் தளத்தில் இயக்குநருக்கு நெகிழ்ச்சியான வாழ்த்துப் பதிவை வெளியிட்டுள்ளார். முகமது இஷாக் இயக்கத்தில் உருவான 'அகடம்' திரைப்படம் அதன் வித்தியாசமான மேக்கிங் முறைக்காக உலக அளவில் கவனம் ஈர்த்தது. அதனைத் தொடர்ந்து அவர் இயக்கிய 'நாகேஷ் திரையரங்கம்' திகில் திரைப்படத்தில் நடிகர் கயல் தேவராஜ் சாமியார் வேடத்தில் நடித்திருந்ததை தனது பதிவில் பெருமையுடன் நினைவுகூர்ந்துள்ளார். மேலும் 'சீசா', '181' உள்ளிட்ட திகில் மற்றும் திரில்லர் திரைப்படங்களை இயக்கி தனித்துவமான கதைசொல்லியாக வலம் வரும் இயக்குநர் முகமது இஷாக்கிற்கு ரசிகர்கள் மற்றும் சினிமா பிரபலங்கள் சமூக வலைத்தளங்களில் வாழ்த்துகளைக் குவித்து வருகின்றனர்.
· Actor Kayal Devaraj