டிராப் ஆகும் நிலைக்குச் சென்ற ஓம் படம்: தனுஷ் தயாரித்த நெகிழ்ச்சியான பின்னணி!

இயக்குநர் ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் தனுஷ் நடித்துள்ள 'ஓம்' படத்தின் பிரீ ரிலீஸ் விழா மேடையில், படம் உருவான பின்னணியை இயக்குநர் உருக்கமாகப் பகிர்ந்துகொண்டார். அமரன் திரைப்படத்தின் படப்பிடிப்பு நடந்துகொண்டிருந்த போதே இந்த கதையை தனுஷிடம் கூறி ஒப்புதல் பெற்றதாக அவர் தெரிவித்தார். ஆனால் அமரன் ரிலீசுக்குப் பிறகு உருவான சில எதிர்பாராத தயாரிப்புச் சிக்கல்களால் 'ஓம்' படம் கைவிடப்படும் நிலைக்குச் சென்றது. என்ன செய்வது என்று தெரியாமல் நின்ற சூழலில், ஒரு நாள் தனுஷ் தன்னை அழைத்து, 'கவலைப்படாதீர்கள், இந்தப் படத்தை நானே தயாரிக்கிறேன்' என்று கூறி மொத்த பொறுப்பையும் ஏற்றுக்கொண்டதாக இயக்குநர் தெரிவித்தார். தனுஷின் அந்த உடனடி முடிவுக்குப் பிறகு, வெறும் பத்தே நாட்களில் ஆர் டேக் நிறுவனம் தயாரிப்பில் இணைந்தது என்று ராஜ்குமார் நெகிழ்ச்சியோடு குறிப்பிட்டார். தனுஷ், மம்மூட்டி மற்றும் சாய் பல்லவி இணைந்துள்ள இத்திரைப்படம் நவம்பர் 20 அன்று திரையரங்குகளில் வெளியாக உள்ளது.

· @_movietamil

பழைய செய்திகள்