இயேசுவை போல இருந்ததால் அவரை அழியாத மனிதனாக்கினேன்: நிவின் பாலி பற்றி இயக்குநர் ராம் நெகிழ்ச்சி!
இயக்குநர் ராம் இயக்கத்தில் நிவின் பாலி, அஞ்சலி, சூரி நடிப்பில் உருவாகியுள்ள 'ஏழு கடல் ஏழு மலை' திரைப்படம் வரும் அக்டோபர் 1 ஆம் தேதி திரைக்கு வருகிறது. கல்லூரி விழாக்களில் படக்குழுவினர் தொடர்ந்து பங்கேற்று வரும் நிலையில், நிவின் பாலியை நாயகனாகத் தேர்வு செய்தது குறித்து இயக்குநர் ராம் பகிர்ந்த சுவாரசியமான தகவல் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. "நிவின் பாலியை முதன்முதலில் நேரில் பார்த்தபோது இயேசுவைப் போலத் தெரிந்தார், அதனால் எனது கதையின் மரணமில்லா அழியாத மனிதனாக அவரை நடிக்க வைத்தேன்" என்று இயக்குநர் ராம் நெகிழ்ச்சியுடன் குறிப்பிட்டுள்ளார். சர்வதேச திரைப்பட விழாக்களில் பங்கேற்று உலகளாவிய பாராட்டுகளைப் பெற்ற இப்படம், காதலும் வாழ்வியலும் கலந்த ஒரு புதுமையான திரைக்கதை அனுபவத்தை வழங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ள இப்படத்தை வி ஹவுஸ் புரொடக்ஷன்ஸ் சார்பில் சுரேஷ் காமாட்சி தயாரித்துள்ளார். நிவின் பாலி, அஞ்சலி, சூரி ஆகியோரின் அற்புதமான கூட்டணி திரையில் எந்த மாதிரியான மேஜிக்கை நிகழ்த்தப் போகிறது என்பதைக் காண சினிமா ஆர்வலர்கள் ஆவலுடன் காத்திருக்கின்றனர்.
· Idiamondbabu