படம் தொடங்கும் முன்பே புத்தகமாகும் திரைக்கதை: இயக்குநர் ராம்நாத் பழனிக்குமாரின் 'சென்சார்' புது முயற்சி!

படம் தொடங்கும் முன்பே புத்தகமாகும் திரைக்கதை: இயக்குநர் ராம்நாத் பழனிக்குமாரின் 'சென்சார்' புது முயற்சி!

வழக்கமாகத் திரைப்படம் வெளியாகி வெற்றி பெற்ற பிறகே அதன் திரைக்கதையை நூலாக வெளியிடும் வழக்கம் தமிழ் சினிமாவில் உண்டு. ஆனால் அதற்கு முற்றிலும் மாறாக, படம் உருவாவதற்கு முன்பே முழுமையான படப்பிடிப்புத் திரைக்கதையைப் புத்தகமாக வெளியிட உள்ளதாக இயக்குநர் ராம்நாத் பழனிக்குமார் அறிவித்துள்ளார். இந்த அறிவிப்பை மக்கள் தொடர்பாளர் நிகில் முருகன் பகிர்ந்துள்ளார். 'அம்பாசமுத்திரம் அம்பானி', 'திருநாள்', 'ஆதார்' ஆகிய படங்களை இயக்கியவரும், 'திண்டுக்கல் சாரதி' படத்துக்கு திரைக்கதை வசனம் எழுதியவருமான ராம்நாத் பழனிக்குமார் அடுத்ததாக 'சென்சார்' என்ற படத்தை இயக்குகிறார். சினிமா ஆர்வலர்களும் வாசகர்களும் கதையை அதன் அசல் எழுத்து வடிவிலேயே அனுபவிக்க வேண்டும் என்ற நோக்கில் இந்த முயற்சி மேற்கொள்ளப்பட்டுள்ளது. இது குறித்துப் பேசிய இயக்குநர், திரையில் நட்சத்திரங்களைக் கொண்டாடும் அதே வேளையில் எழுத்துக்கும் உரிய முக்கியத்துவம் கிடைக்க வேண்டும் எனத் தெரிவித்துள்ளார். 'சென்சார்' படத்தின் நடிகர்கள், தொழில்நுட்பக் கலைஞர்கள் மற்றும் படப்பிடிப்பு குறித்த அறிவிப்புகள் விரைவில் அடுத்தடுத்து வெளியாகவுள்ளன.

· Nikil Murukan

பழைய செய்திகள்