இயக்குநர் ரத்ன குமாரின் '29' திரைப்படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் குவியும் பாராட்டுக்கள்

இயக்குநர் ரத்ன குமாரின் '29' திரைப்படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் குவியும் பாராட்டுக்கள்

தமிழ் திரையுலகில் மேயாத மான், ஆடை உள்ளிட்ட தனித்துவமான திரைப்படங்களை இயக்கிய இயக்குநர் ரத்ன குமார் உருவாக்கிய புதிய படைப்பான '29' திரைப்படத்திற்கு பார்வையாளர்கள் மத்தியில் நல்ல வரவேற்பும் பாராட்டும் கிடைத்து வருகிறது. வித்தியாசமான கதைக்களம் மற்றும் எதார்த்தமான வசனங்களுடன் உருவாகியுள்ள இப்படம் சினிமா ஆர்வலர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது. படம் பார்த்த ரசிகர்கள் சமூக வலைத்தளங்களில் படக்குழுவினரை நேரடியாகப் பாராட்டி வருகின்றனர். குறிப்பாக படத்தின் எதார்த்தமான வசனங்கள், நாயகனின் வசீகரமான குரல் மற்றும் துல்லியமான உச்சரிப்பு ஆகியவை பார்வையாளர்களை வெகுவாகக் கவர்ந்துள்ளதாகக் கூறியுள்ளனர். இத்தகைய தரமான உணர்வுப்பூர்வமான திரைப்படத்தை வழங்கியதற்காக ரத்ன குமாருக்கு ரசிகர்கள் மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துள்ளனர். வழக்கமான வணிக பாணியிலிருந்து விலகி கதைக்கு முக்கியத்துவம் கொடுத்து உருவாகும் திரைப்படங்களுக்கு ரசிகர்கள் தொடர்ந்து ஆதரவு அளித்து வருவது தமிழ் சினிமாவில் ஆரோக்கியமான மாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. ரத்ன குமாரின் திரைக்கதை மற்றும் இயக்கத்தில் அடுத்தடுத்து வெளியாகவுள்ள திரைப்படங்களின் மீதும் சினிமா பிரியர்களுக்கு ஆர்வம் அதிகரித்துள்ளது.

· Mrrathna

பழைய செய்திகள்