இயக்குனரும் கதாசிரியருமான எஸ்.ஜி.விஜயகுமார் மறைவு: திரையுலகினர் அஞ்சலி
தமிழ் திரையுலகில் இயக்குனராகவும் கதாசிரியராகவும் பணியாற்றிய எஸ்.ஜி.விஜயகுமார் (எ) ஜி.வி.குமார் உடல்நலக்குறைவால் காலமானார். கேயல் தேவராஜ் தனது எக்ஸ் பக்கத்தில் இந்தத் துயரச் செய்தியைப் பகிர்ந்துள்ளார். சூப்பர் குட் பிலிம்ஸ் தயாரிப்பில் ஜித்தின் ரமேஷ், மல்லிகா கபூர் நடித்த ‘புலி வருது’ திரைப்படத்தை இயக்கியவர் இவர். மேலும் கேப்டன் விஜயகாந்த் நடிப்பில் வெளியான வெற்றிப் படமான ‘நரசிம்மா’ திரைப்படத்தின் கதாசிரியராகவும் பணியாற்றி கவனிக்கப்பட்டார். பல நாடகங்கள் மற்றும் திரைப்படங்களிலும் இவர் குணச்சித்திர வேடங்களில் நடித்துள்ளார். மறைந்த எஸ்.ஜி.விஜயகுமாரின் விருப்பத்திற்கு இணங்க அவரது உடல் புட்டபர்த்தி சாய்பாபா மருத்துவமனைக்கு தானமாக வழங்கப்பட்டுள்ளது. அவரது மறைவுக்கு தமிழ் திரையுலக பிரபலங்கள் மற்றும் ரசிகர்கள் தங்களது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்து வருகின்றனர்.
· Actor Kayal Devaraj