உறவுகளின் உன்னதத்தை பேசும் ஹைகூ திரைப்படம்: திரையரங்குகளில் வரவேற்பு
இயக்குநர் யுவராஜ் சின்னசாமி இயக்கத்தில் வெளியாகியுள்ள ஹைகூ திரைப்படம் நவீன காலகட்ட மனித உறவுகளை மிக அழகாக காட்சிப்படுத்தியுள்ளதாகப் பரவலான பாராட்டுகளைப் பெற்று வருகிறது. திரையரங்குகளில் திரையிடப்பட்டு வரும் இப்படம் பார்வையாளர்களின் மனதை வெகுவாகக் கவர்ந்துள்ளது. காதல் என்பது வெறும் கவர்ச்சி மட்டுமல்லாமல் பரஸ்பர மரியாதை, நம்பிக்கை மற்றும் ஒருவரையொருவர் ஆழமாகப் புரிந்து கொள்ளும் தன்மை ஆகியவற்றின் மீதுதான் நிலைத்து நிற்கும் என்ற கருத்தை படம் அழுத்தமாகப் பதிவு செய்துள்ளது. கதையின் யதார்த்தமான ஓட்டமும் கதாபாத்திரங்களின் தேர்வும் படத்திற்கு மிகப்பெரிய பலமாக அமைந்துள்ளன. நடிகர்களின் எதார்த்தமான நடிப்பு காட்சிகளுக்கு உயிரோட்டம் கொடுத்துள்ளது. குடும்பத்துடன் சென்று பார்க்கும் வகையில் அமைதியான மற்றும் ஆழமான உணர்வுகளைக் கொண்ட படைப்புகளை விரும்பும் சினிமா ரசிகர்களுக்கு ஹைகூ திரைப்படம் ஒரு நல்ல திரையனுபவமாக அமைந்துள்ளதுடன் விமர்சகர்களின் கவனத்தையும் ஈர்த்துள்ளது. திரையரங்குகளில் இப்படத்தைப் பார்த்த ரசிகர்கள் நல்ல கருத்துக்களைப் பகிர்ந்து வருகின்றனர்.
· Only Kollywood