நண்பர்களின் ரீயூனியன் கொண்டாட்டம்: 'டான் போஸ்கோ' திரைப்படத்தின் கலகலப்பான டீசர் வெளியானது!

நண்பர்களின் ரீயூனியன் கொண்டாட்டம்: 'டான் போஸ்கோ' திரைப்படத்தின் கலகலப்பான டீசர் வெளியானது!

பழைய பள்ளி கல்லூரி நினைவுகளையும் நண்பர்களின் மறக்க முடியாத சந்திப்பையும் முழுநீளப் பொழுதுபோக்கு அம்சங்களுடன் சொல்ல வரும் 'டான் போஸ்கோ' (Don Bosko) திரைப்படத்தின் அதிகாரப்பூர்வ டீசர் தற்போது வெளியாகியுள்ளது. இந்த அறிவிப்பை மக்கள் தொடர்பாளர் டயமண்ட் பாபு தனது எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். ருஷ்யதத்தா மற்றும் மிர்ணா முன்னணி கதாபாத்திரங்களில் நடித்துள்ள இப்படத்திற்கு ஸ்ரீசரண் பாகாலா இசையமைத்துள்ளார். ஷங்கர் கௌரி இயக்கத்தில் உருவாகியுள்ள இப்படத்தின் டீசரில் இடம்பெற்றுள்ள நகைச்சுவைக் காட்சிகளும், நண்பர்களின் கலாட்டாக்களும் இளசுகளை வெகுவாக ஈர்க்கும் வகையில் அமைந்துள்ளன. பழைய நினைவுகளை மீட்டெடுக்கும் நெகிழ்ச்சியான தருணங்களும் இதில் கலந்துள்ளது கூடுதல் சிறப்பம்சமாகும். இளைஞர்களையும் குடும்ப ரசிகர்களையும் கவரும் சுவாரசியமான அம்சங்களுடன் தயாராகியுள்ள 'டான் போஸ்கோ' திரைப்படம் விரைவில் திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. டீசர் வெளியானதைத் தொடர்ந்து படத்தின் மீதான எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் கணிசமாக அதிகரித்துள்ளது.

· Idiamondbabu

பழைய செய்திகள்